Sunday, 8 November 2015

மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா'வை, நனவாக்கும் வகையில்,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும், 'மொபைல் ஆப்'களை நேற்று அறிமுகப்படுத்தியது.


டில்லி, விஞ்ஞான் பவனில் நேற்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, 'சாரன்ஷ்' மென்பொருளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டது; இது, குழந்தைகளின் கல்வி அறிவு மேம்பாட்டை, பாடவாரியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்ய, பெற்றோருக்கு உதவி செய்யும். தவிர,மாணவர்கள், இணையதளத்தில் இருந்து பாடங்களை பெற உதவும், எண்ணற்ற, 'மொபைல்' செயலிகள், இணையதளம் சார்ந்த இயங்கு தளங்கள் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி பேசியதாவது:பள்ளிக் கல்வியில் வெளிப்படைத் தன்மையையும், புதிதாக கற்கும் வாய்ப்புகளையும், குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவதில், மனிதவள மேம்பாட்டுத் துறை ஆர்வமாக உள்ளது.மாணவர்களின் தேர்வுச் சுமைகளை குறைக்க, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, புதிய திட்டங்கள் தீட்டி வருகிறோம். வரும் ஆண்டில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். மாநில அரசு களின் உதவியால், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு கழிப்பறை அமைத்து தரும் திட்டம், நனவாகி வருகிறது. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருநாள் வார விடுமுறை உள்ள நிலையில், நடுவில் ஒருநாள், திங்கள் மட்டும், வேலை நாளாக இருக்கிறது.எனவே, திங்கள் கிழமையும் விடுமுறை அறிவித்தால், வெளியூர் சென்று, பண்டிகையை கொண்டாடுவோருக்கு வசதியாக இருக்கும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கோரிக்கை வந்தது.


இதுகுறித்து, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு எடுத்துக் கொள்ளுமாறு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அதன்படி வேலுார், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், திங்கள் மற்றும் புதன் கிழமைகள், உள்ளூர் விடுமுறையாக அறிவித்து உள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை போன்ற நகரங்களில், செவ்வாய் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், புதன் கிழமை அன்று, அரசு பள்ளி ஆசிரியர்கள், பண்டிகை கால விடுப்பு எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள் கூறுகையில், 'பள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுக்கு மட்டுமே, பண்டிகை கால விடுப்புக்கு அனுமதி அளிக்க முடியும். ஏனென்றால், இரண்டு பங்கு ஆசிரியர் இல்லாவிட்டால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கவேண்டிய நிலை ஏற்படும். அதேநேரம், மாணவர்கள் விடுப்பு எடுத்தால்,அதை தடுக்க முடியாது; பள்ளிக்கு விடுமுறை தான்' என்றனர்

Friday, 6 November 2015

இன்று பிறந்த நாள் காணும் நமது பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம்பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது.


இந்த மாணவர்கள் அறிவிலும், உடல் நலனிலும் மற்ற மாணவர்களை விட, நல்ல முறையில் இருந்தாலும், பாடங்களை புரிந்து படித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவற்றில் திணறுகின்றனர்.

அவர்களுக்கு, சரியான முறையில் பாடம் கற்பித்தால், எந்த குறைபாடும்இன்றி, மற்ற மாணவர்களை விட, ஒரு படி மேலே படிக்க முடியும். எனவே, இத்தகைய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை 'டிஸ்லெக்சியா' சங்கம் சார்பில், இன்று சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர்., வாணி மகாலில் இந்த பயிற்சிவகுப்பு நடக்கிறது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள், சிறப்புக் கல்வியாளர் ஹரிணி மோகன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள்- ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைத்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...

இன்று மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அனைவரும் எபோழுதும் போனும் கையுமாகத்தான் உள்ளனர். போன் வைத்திருப்பதில் மிக பெரிய கஷ்டமே அதுக்கு ரீ சார்ஜ் செய்வதுதான் . இபோழுது நெட், மெசேஜ் , கால் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துவிட்டது . இந்த நிலையில் இலவசமாக கொஞ்சம் கிடைத்தால் நன்றாக தானே இருக்கும் .

இதோ உங்களுக்காக ஒரு Application .

* மிக எளிதான இதில் இணையலாம் .நீங்களும் இணைய இங்கே கிளிக்செய்யவும்... 

*Application-ஐ Download செய்த உடன் உங்களது Mobile. Number கொடுத்து Register செய்துகொள்ளவும்.

*பின்பு அதில் வரும் Application -ஐ நீங்கள் Download செய்வதன் மூலம் உங்களது கணக்கில் பணம் ஏறத்துவங்கும்.

*நமது நண்பர்களும் இந்த Application -ஐ share செய்வதன் மூலமும் உங்களது கணக்கில் Rs.40 பணம் ஏறத்துவங்கும்.

*உங்களது கணக்கில் உள்ள பணத்தை நீங்கள் தேவைப்படும்போது Re-charge செய்து கொள்ளலாம்.

CLICK HERE Application link... 

Thursday, 5 November 2015